இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னிட்டு கிருமி நாசினி மருந்துகளும் தெளிக்கப்பட்டு வருகிறது. 

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னிட்டு கிருமி நாசினி மருந்துகளும் தெளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, இந்த கோயிலில் உள்ள மாரியம்மனுக்கு நோய் தீர்க்கும் மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுவது வழக்கம்.

இதனால் அம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கோயிலுக்கு வந்து நேர்ததிகடன் செலுத்தினால் நோய் வராது என்ற பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இவ்வாறு பிரசித்திபெற்ற கோயிலுக்கு தென் மாவட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

மேலும் பங்குனி மாதம் மாரியம்மனுக்கு விஷேச மாதமாக கருதப்படுவதால்,இக்கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது.இந்நிலையில் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கைகளைக் கழுவிய பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. 

மேலும் கோயிலும் நிர்வாகம் சார்பில் மொட்டைப் போடும் பணியாளர்களுக்கு முக கவசம், கை உறைகளும் வழங்கப்பட்டு அவை அணிந்த பிறகே பணிகளைச் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் கோயிலுக்கு உள்ளே வரும் பகத்ரகளுக்கு கிருமி நாசினி மருந்துகளும் தெளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் கரோனா குறித்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com