ஈரோட்டில் பள்ளி மாணவர்கள் தயாரித்த ரோபோ கண்காட்சி

ஈரோடு ரிலையன்ஸ் வணிக வளாகத்தில் பள்ளி மாணவர்கள் தயாரித்த ரோபோ கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.  
ரோபோ கண்காட்சி
ரோபோ கண்காட்சி

ஈரோடு: ஈரோடு ரிலையன்ஸ் வணிக வளாகத்தில் பள்ளி மாணவர்கள் தயாரித்த ரோபோ கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.  

15 ரோபோட்டிக் இளம் விஞ்ஞானிகள் தங்கள் படைப்பு திறன்களையும், புதுமையான அணுகுமுறைகளையும் வெளிப்படுத்தினர். இந்த திறன் மேம்பாட்டு நிகழ்வை செவன்த் சென்ஸ் ஸ்கூல் ஆப் ரோபோடிக்ஸ் அகாதெமி நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சௌமியா சந்தானம் ஒருங்கிணைத்தார்.

ரோபோ பைக், கலர் சென்சார் ரோபோ, க்ரெய்ன் ரோபோவுடன் க்ரிப்பர், சாக்கர் ரோபோ,ஸ்நெய்க் ரோபோ, கொரில்லா ரோபோ, சர்க்கிட் வித் போர்டு விண்ட் மில், மோட்டார் போட் மற்றும் கியர் பாக்ஸ் போன்ற போன்ற அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையின் துறைத்தலைவர்  பி.செல்வன் பேசினார். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com