Enable Javscript for better performance
odhisha youth tested for corona ! ஒடிசாவிலிருந்து சாத்தூர் வந்த இளைஞருக்கு கரோனா அறிகுறியா என சோதனை- Dinamani

சுடச்சுட

    

    ஒடிசாவிலிருந்து சாத்தூர் வந்த இளைஞருக்கு கரோனா அறிகுறியா என சோதனை

    By DIN  |   Published on : 18th March 2020 06:47 PM  |   அ+அ அ-   |    |  

    odhisha youth tested for corona

    கோப்புப படம்

     

    சாத்தூர்: ஒடிசாவிலிருந்து சாத்தூர் வந்த இளைஞருக்கு கரோனா அறிகுறியா என சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

    தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் குறித்த தடுப்பு நடவடிக்கை தமிழக அரசு சார்பிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பிலும் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சாத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அட்டை ஆலை, அரிசி ஆலை, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை உள்ளிட்ட ஆலைகள் உள்ளன.இந்த ஆலைகளில் அதிகமாக வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்குசெவ்வாய்கிழமை இரவு ஒரிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் மூலம் வேலைக்காக வந்துள்ளார்.இங்கு வந்த அவர் இரவு முழுவதும் அதிக காய்ச்சல், இருமல், மூச்சு திணறலுடன் இருந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த பணியாளர்கள் புதன்கிழமை காலை அவரை கோவில்பட்டி அரசு தலைமை வருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முதலுதவி செய்து, கரோனா தொற்று உள்ளதா என்பதற்காக ஆய்வு செய்ய தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர்.மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai