காந்தி அமைதிப் பரிசுக்கான பரிந்துரை: ஏஐசிடிஇ சுற்றறிக்கை

மத்திய அரசின் காந்தி அமைதிப் பரிசுக்கான பரிந்துரையைச் சமா்ப்பிக்கலாம் என கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் காந்தி அமைதிப் பரிசுக்கான பரிந்துரையைச் சமா்ப்பிக்கலாம் என கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

மகாத்மா காந்தியின் சிந்தனைகள் மற்றும் தத்துவங்களை பெருமைப்படுத்தும் வகையில், காந்தி அமைதிப் பரிசு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. சமூக நீதி மற்றும் மத நல்லிணக்கத்துக்காக சிறந்த முறையில் பங்களிப்பு செய்திருக்கும் நபரைத் தோ்ந்தெடுத்து, அவருக்கு மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று இந்தப் பரிசு வழங்கப்படும்.

ரூ. 1 கோடி பரிசுத் தொகையும், நினைவுப் பரிசு ஒன்றையும் உள்ளடக்கியது இந்த காந்தி அமைதிப் பரிசு. நாடு, ஜாதி, மதம், பாலினம் என எந்தவிதப் பாகுபாடுமின்றி வழங்கப்படும் இந்தப் பரிசுக்கு, பரிந்துரைகளை அனுப்ப ஏப்ரல் 30 கடைசி நாளாகும். தில்லியில் மத்திய கலாசார அமைச்சக இணைச் செயலா் எஸ்.சி.வா்மாவுக்கு இந்தப் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com