திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.5.36 கோடி உபரி 

திருப்பூர் மாநகராட்சியில் 2020-2021ஆம் ஆண்டுக்கான ரூ.5.36 கோடி உபரி புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.5.36 கோடி உபரி 

திருப்பூர் மாநகராட்சியில் 2020-2021ஆம் ஆண்டுக்கான ரூ.5.36 கோடி உபரி புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி வரும் நிதியாண்டில் மாநகராட்சியின் மொத்த வரவினம் ரூ.1,337.14 கோடி என்றும், மாநகராட்சியின் மொத்த செலவினம் ரூ.1,331.78 கோடி என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ரூ.5.36 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்த வரவினம் ரூ.1,337 கோடி:

இந்த பட்ஜெட்டில் வருவாய் நிதியாக ரூ.173.69 கோடியும், குடிநீர் வடிகால் நிதியாக ரூ.95.5 கோடியும், கல்வி நிதியாக ரூ.4.94 கோடி என மொத்தம் ரூ.274.13 கோடியும், மூலதன வரவினமாக 428 கோடியும், குடிநீர் வடிகால் நிதியாக ரூ.633.50 கோடியும், கல்வி நிதியாக ரூ.1.50 கோடியாக ரூ.1,063 கோடி என மொத்தம் ரூ.1,337.14 கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொத்த செலவினம் ரூ.1,332 கோடி:இந்த பட்ஜெட்டில் வருவாய் நிதி செலவினமாக ரூ.182.98 கோடியும், குடிநீர் வடிகால் நிதி செலவினமாக ரூ.96.42 கோடியும், கல்வி நிதி செலவினமாக ரூ.3.72 கோடியும் என மொத்தம் 283.12 கோடியும், மூலதன வருவாய் நிதி செலவினமாக ரூ.414.05 கோடியும், குடிநீர் வடிகால் வரி செலவினமாக ரூ.631.90 கோடியும், கல்வி செலவினமாக ரூ.2.70 கோடி என மொத்தம் ரூ.1,048.65 கோடி என மொத்தம் 1331.78 கோடிக்கு ஒதுக்கப்பட்டுள்து.

உபரி பட்ஜெட் ரூ.5.36 கோடி:

வருவாய் மற்றும் மூலதன நிதியில் ரூ.4.65 கோடி உபரியாக இருப்பதாகவும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியிலிருந்து ரூ.68.36 லட்சம் உபரியாகவும், ஆரம்பக் கல்வி நிதியில் ரூ.2.81 லட்சம் என மொத்தம் ரூ.5.36 கோடி உபரியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலின்போது கணைக்குப்பிரிவு உதவி ஆணையாளர் சந்தானநாராயணன்,  மாநகராட்சி பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் சபியுல்லா, உதவி ஆணையர்கள் தங்கவேல்ராஜன், செல்வநாயகம்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com