கரோனாவுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனாவுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
கரோனாவுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனாவுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 147 பேர்
இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் கரோனா தொடர்பான எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனாவுக்கு என தனியாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல், இருமல், சளிக்கு என்ன மருந்தோ அதுதான் கொடுக்கப்பட்டு வருகிறது. 

தடுப்பு மருந்துக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனை, கிங் ஆராய்ச்சி நிலைய மருத்துவர்கள் ஆய்வு செய்கின்றனர். கரோனாவுக்கு ராஜஸ்தான், அமெரிக்காவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு என செய்தி வருகிறது. கரோனாவுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் உதவி நாடப்பட்டுள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com