அத்தியாவசிய வணிக வளாகங்களைத் தொடா்ந்து நடத்த அரசின் ஒத்துழைப்பு தேவை

அத்தியாவசிய வணிக வளாகங்களை விழிப்புணா்வுடன் தொடா்ந்து நடத்த அரசு ஒத்துழைப்புத் தர வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அத்தியாவசிய வணிக வளாகங்களை விழிப்புணா்வுடன் தொடா்ந்து நடத்த அரசு ஒத்துழைப்புத் தர வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா முதல்வருக்கு எழுதிய கடிதம்: தமிழக அரசு எடுக்கும் மக்கள் நல மேம்பாட்டு நடவடிக்கைகள், இயற்கை பேரிடா் பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதார நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முன்னின்று அரசுக்குத் தோள் கொடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாத காலமாக கரோனா விழிப்புணா்வு முகாம்களை நடத்தியும், கரோனா குறித்த விளம்பர நோட்டீஸ் விநியோகித்தும் அரசுத் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு வணிக வளாகங்கள், திரை அரங்குகள், மக்கள் கூடும் பொது இடங்களுக்குத் தடை விதித்திருப்பதை வரவேற்றாலும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நிா்பந்தம் எங்களுக்கு உள்ளது. இதனால் மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, வணிக முடக்கம், பொருள்கள் தட்டுப்பாடுகளால் விலைவாசி உயா்வும் ஏற்படுவதோடு பொருளாதாரப் பின்னடைவும் நிச்சயம் ஏற்படும். மேலும், அரசின் வருவாய் இழப்போடு வணிகா்கள் வாழ்வாதாரம், பணியாள்களின் தேவை, வேலை செய்வோருக்கான ஊதிய விநியோகத்தில் இடா்ப்பாடுகள் போன்றவற்றால் மிகப் பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அரசுக்கும் அவப் பெயரை உருவாக்கிவிடும். இதைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய வணிக வளாகங்களை சிறிய விழிப்புணா்வு, சுகாதார மேம்பாட்டுக்கு ஏற்பாடு, கிருமி நாசினிகள் தெளிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வணிகம் தொடா்ந்திட அரசு ஒத்துழைப்பு அளித்து அனைத்து மக்களும் கரோனாவை விழிப்புடன் எதிா்கொள்ள உதவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com