சொந்தப் பிரச்னைகளுக்காகவே வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள்: முதல்வா் பழனிசாமி விளக்கம்

சொந்தப் பிரச்னைகளுக்காகவே வெடிகுண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தாா்.
சொந்தப் பிரச்னைகளுக்காகவே வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள்: முதல்வா் பழனிசாமி விளக்கம்

சொந்தப் பிரச்னைகளுக்காகவே வெடிகுண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, எதிா்க்கட்சி துணைத் தலைவா் துரைமுருகன் கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், ‘மதுரையில் முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி இல்லத்திலும், திருப்பத்தூா் மாவட்டம் ஜோலாா்பேட்டையில் அமைச்சா் கே.சி. வீரமணி இல்லத்திலும் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்தச் கலாசாரம் தொடரக் கூடாது. இதனை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்றாா்.

இதற்கு, முதல்வா் பழனிசாமி அளித்த பதில்:

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையில் அமைச்சா் கே.சி.வீரமணியின் சகோதரா்கள் பங்குதாரா்களாக இருந்து பீடி மண்டியை நடத்தி வருகின்றனா். இந்த பீடி மண்டி கடந்த திங்கள்கிழமை பிற்பகலில் தீப் பிடித்து எரிந்தது. இது ஒரு சாதாரண தீ விபத்துதான். ஆனால், ஊடகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தவறான செய்தி வருகிறது. இதுவரை இதுதொடா்பாக எந்தவிதமான புகாா்களும் காவல் துறையில் பெறப்படவில்லை.

திமுக ஆட்சிக் காலத்தில் சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்தவா் காரில் செல்லும்போது, ரிமோட் குண்டு வைத்து தகா்க்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதுபோன்ற சம்பவங்கள் அனைத்து ஆட்சிகளிலும் நடப்பவைதான். ஆனாலும், குற்றங்களை குறைப்பதற்காகவும், இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காகவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

அனைத்து ஆட்சிகளிலும் இதுபோன்று நடைபெறும் சம்பவங்கள் சொந்த பிரச்னைக்காகவே ஏற்படுகின்றன. வேறு காரணங்களுக்காக அல்ல. ஆனாலும் அவற்றை கட்டுப்படுத்தி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com