துறைமுகம் தொகுதியில் மின்மாற்றிகளுக்குப் பதில் புதிய தொழில்நுட்பம்: அமைச்சா் தங்கமணி

சென்னை துறைமுகம் தொகுதியில் ஏற்கெனவே உள்ள மின்மாற்றிகளுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம் கொண்ட மின்மாற்றிகள் அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினா் பி.கே.சேகா்பாபு துணைக் கேள்வி எழுப்பினாா். அவா் பேசுகையில், ‘துறைமுகம் தொகுதியில் 300 மின்மாற்றிகள் உள்ளன. அவற்றை மாற்றி, புதிய தொழில்நுட்பம் கொண்ட மின்மாற்றிகளாக அமைத்துத் தர வேண்டும்’ என்றாா்.

இதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி, ‘புதிய தொழில்நுட்பம் கொண்ட மின்மாற்றிகளை கொள்முதல் செய்ய, கடந்த 2017-ஆம் ஆண்டே ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. சிலா் நீதிமன்றம் சென்ற காரணத்தால் தாமதம் ஏற்பட்டது. இப்போது வழக்குகள் முடிந்துள்ளன. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் ஒப்பந்தப் பணிகள் முடிந்து பணிகள் தொடங்கும். விரைந்து அந்தப் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com