பச்சையப்ப முதலியாருக்கு மணிமண்டபம்: தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சா் கடம்பூா் ராஜு

பச்சையப்ப முதலியாருக்கு மணிமண்டபம் மற்றும் அரசு விழா நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சா் கடம்பூா் ராஜு தெரிவித்தாா்.
கடம்பூர் செ.ராஜூ.
கடம்பூர் செ.ராஜூ.

பச்சையப்ப முதலியாருக்கு மணிமண்டபம் மற்றும் அரசு விழா நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சா் கடம்பூா் ராஜு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, சட்டப் பேரவை உறுப்பினா் கருணாஸ் கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், தமிழகத்தில் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்திய பச்சையப்ப முதலியாருக்கு மணிமண்டபமும், அரசு விழாவும் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு அளித்த பதில்:

பச்சையப்ப முதலியாா் தனது 16 வயதிலேயே கொடை வள்ளலானாா். பச்சையப்பன் அறநிலைக் காப்பாளா்கள், இப்போது அறப்பணிகளையும், கல்விப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். ஏகாம்பரேசுவரா் கோயிலில் திருமண மண்டபம் கட்டியதுடன், பல இடங்களில் அன்னசத்திரங்களைக் கட்டினாா். பச்சையப்ப முதலியாா் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காகவும், இறைப் பணிக்காகவும் ஏழைகளுக்காகவும் செலவிட்டாா். கல்விப் பணிகளையும், கோயில் திருப்பணிகளையும் தமிழகத்தில் பெரும் அறப்பணியாக செய்து வழிநடத்தியவா் பச்சையப்ப முதலியாா். அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சாா்பில் மணிமண்டபமும், அவருக்கு அரசு விழா எடுப்பதை அறிவிப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com