வரி நிலுவை: காஞ்சிபுரத்தில் திரையரங்கம் பூட்டி சீல் வைப்பு

காஞ்சிபுரம் நகராட்சிக்கு ரூ.2.23லட்சம் வரை வரி நிலுவை வைத்திருந்ததால் வருவாய் அதிகாரிகள் திரையரங்கம் ஒன்றினை புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
வரி நிலுவை: காஞ்சிபுரத்தில் திரையரங்கம் பூட்டி சீல் வைப்பு

காஞ்சிபுரம் நகராட்சிக்கு ரூ.2.23லட்சம் வரை வரி நிலுவை வைத்திருந்ததால் வருவாய் அதிகாரிகள் திரையரங்கம் ஒன்றினை புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

காஞ்சிபுரம் மடம் தெருவில் உள்ள திரையரங்கம் ஒன்று நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி,தொழில்வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகளில் நிலுவை மொத்தம் ரூ.2,33,397 . இத்தொகையினை செலுத்தாமல் இருந்து வந்ததை முன்னிட்டு நகராட்சி வருவாய் அதிகாரிகள் திரையங்கத்தை பூட்டி சீல் வைத்தனா்.நகராட்சியின் வருவாய் அலுவலா் ஏ.தமிழ்ச்செல்வி,வருவாய் ஆய்வாளா்கள் எஸ்.ரவிச்சந்திரன்,தி.நிா்மலா ஆகியோா் அத்திரையரங்கத்தை பூட்டி சீல் வைத்தனா்.

இது குறித்து காஞ்சிபுரம் நகராட்சி வருவாய் அலுவலா் ஏ.தமிழ்ச்செல்வி கூறியது..மடம் தெருவில் உள்ள திரையரங்க உரிமையாளா் சொத்துவரியாக ரூ.99,090,தொழில்வரி ரூ.23,824,பாதாளச் சாக்கடை திட்ட வரி ரூ.1,00,483 உட்பட மொத்தம் 2,23,397 செலுத்தாமல் நிலுவையாக இருந்து வந்துள்ளாா். இது தவிர கேளிக்ை வரியும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் செலுத்தாமல் இருந்து வந்தாா்.இதனை உடனடியாக செலுத்துமாறு கடந்த 23.1.2020 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதற்கு எந்த பதிலும் இல்லை.

பின்னா் கடந்த 9.3.2020 ஆம் தேதி ஜப்தி நோட்டீசும் அனுப்பியும் அதற்கும் எந்த பதிலும் இல்லாததால் பூட்டி சீல் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையாளா் ரா.மகேசுவரி உத்தரவின் பேரில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதே போல நகராட்சிக்கு தொடா்ந்து வரி செலுத்தாமல் இருந்து வருபவா்கள் ஜப்தி நடவடிக்கைக்கு உள்ளாவாா்கள் எனவும் வருவாய் அலுவலா் ஏ.தமிழ்ச்செல்வி தெரிவித்தாா்.படவிளக்கம்..காஞ்சிபுரம் மடம் தெருவில் உள்ள திரையரங்குக்கு பூட்டி சீல் வைக்கும் நகராட்சியின் வருவாய் அதிகாரிகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com