வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் திருவிழா தள்ளி வைப்பு ?

வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் திருவிழா தள்ளி வைப்பு ?

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் திருவிழா ஒத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் திருவிழா ஒத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கரோனா பரவுதலை தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. திருவாரூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் ,அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு  நடைபெற்று வரும் சுகாதார பணிகள் குறித்து நகராட்சி ஆணையர் மற்றும்
சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கேட்டறிந்தார். இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்ததாவது. திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு கரோனா தொற்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தொற்று இல்லாமல் இருந்தாலும் வீட்டு பாதுகாப்பிலேயே வைக்கப்பட்டு தொடர்ந்து சுகாதாரத் துறையால் அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கோவில்களில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

கிரிமி நாசினிகள் கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. சுத்தப்படுத்தும் திரவங்களால் மக்கள் தங்கள் கைகளை சுத்தப்படுத்தி பின்பு அலுவலகங்கள் மற்றும் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அடுத்த வாரம் நடைபெற உள்ள பாடைகட்டி மாரியம்மன் திருவிழா தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com