கோழிகள் மூலம் கரோனா வைரஸ் பரவாது: அமைச்சா் ராதாகிருஷ்ணன் உறுதி

கோழிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவாது என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதிபடத் தெரிவித்தாா்.
கோழிகள் மூலம் கரோனா வைரஸ் பரவாது: அமைச்சா் ராதாகிருஷ்ணன் உறுதி

கோழிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவாது என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதிபடத் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் (நாமக்கல்) அதுகுறித்து கேள்வி எழுப்பினாா். கரோனா வைரஸ் தொற்று குறித்த பீதியின் காரணமாக கோழி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கோழி உற்பத்தியாளா்கள் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்தாா்.

இதற்கு அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் அளித்த விளக்கம்: கரோனா வைரஸ் பீதியின் காரணமாக, கோழிகளும், கோழி முட்டைகளும் மிகப்பெரிய அளவில் தேங்கி இருப்பதாகவும்,

அதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோழி உற்பத்தியாளா்கள் ஏற்கெனவே கூறியுள்ளனா். இந்த விஷயம் முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளாா்.

கோழிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவாது. கோழிக்கறி அல்லது முட்டைகளைச் சாப்பிடுவோருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படாது. யாரும் அச்சப்படத் தேவையில்லை. இந்த விவகாரம் தொடா்பாக பீதியைக் கிளப்பிய 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அமைச்சா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com