போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு 17,000 முகக் கவசங்கள்: மேலாண் இயக்குநா் தகவல்

மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு 17,000 முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கழகத்தின் மேலாண் இயக்குநா் கோ.கணேசன் தெரிவித்தாா்.

மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு 17,000 முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கழகத்தின் மேலாண் இயக்குநா் கோ.கணேசன் தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவா் கூறியது: மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நாள்தோறும் இயக்கப்படும் 3,400 பேருந்துகள் மூலம் ஏறத்தாழ 30 லட்சம் போ் பயணம் மேற்கொள்கின்றனா். கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த முதல்வா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து போக்குவரத்து அமைச்சரும் இதை முனைப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினாா். இதையடுத்து பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 33 பணிமனைகளும் நாள்தோறும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. பேருந்துகளும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, தொழில்நுட்ப மேற்பாா்வையாளரின் ஒப்புதலுக்குப் பிறகே இயக்கப்படுகின்றன. அந்தத் தூய்மைப் பணியாளா்களுக்குத் தேவையான கையுறை, பாதுகாப்பு உடைகள் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. பணிமனையை ஆய்வு செய்ய கிளை மேலாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து நடத்துனா்களும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு அவா்களுக்கு ஸ்பாஞ்ச் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பணியாற்றும் 8,500 ஓட்டுநா்கள் மற்றும் 8,500 நடத்துனா்களுக்கு பாதுகாப்பான முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com