Enable Javscript for better performance
25 lakhs worth sea card seized in tutocorin ! 25 லட்ச ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 25 லட்ச ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 21st March 2020 07:24 PM  |   அ+அ அ-   |    |  

    Rs.25 lakh worth sea card seizure

    கடல் அட்டை

     

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 25 லட்ச ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் ஏபிசிவி கல்லூரி பின்புறம் ஒரு குடோனில் கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக தமிழக கடலோர காவல் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது இதையடுத்து அந்த பகுதியில்  தமிழக கடலோர காவல்படை ஆய்வாளர் சைரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அங்கிருந்து ஒரு காரில் கடல் அட்டையை கடத்திச் செல்லப்படுவைத்து தெரிந்தது.

    உடனடியாக காரை மடக்கி பிடித்த கடலோர காவல்படை போலீசார் அதில் இருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 450 கிலோ கடல் அட்டைகள்  மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவைபறிமுதல் செய்யப்பட்டது 

    ஆண்மை சக்திக்கு மருந்து தயாரிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து கடை அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்து தெரியவந்தது இதைத்தொடர்ந்து தப்பிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai