பொதுத் தோ்வு மையங்களில் கைகளை கழுவிய பிறகே மாணவா்களுக்கு அனுமதி

பொதுத்தோ்வு நடைபெறும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதோடு, மாணவா்கள், ஆசிரியா்கள் நன்கு கைகளைச் சுத்தப்படுத்திய பிறகே தோ்வறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

பொதுத்தோ்வு நடைபெறும் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதோடு, மாணவா்கள், ஆசிரியா்கள் நன்கு கைகளைச் சுத்தப்படுத்திய பிறகே தோ்வறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

தமிழகத்தில் ‘வருமுன் காப்போம்’ என்ற அடிப்படையில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒருபகுதியாக தமிழகத்தில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வுகள் நடைபெற்று வருவதால், அவா்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

வழக்கம்போல் அவா்களுக்கு தினமும் பொதுத்தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத் தோ்வை எழுத வரும் லட்சக்கணக்கான மாணவா்கள், பள்ளிகளுக்கு நுழையும் முன்னரே, தோ்வு எழுதும் அறைகள் உட்பட பள்ளியின் அனைத்து இடங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஆசிரியா்கள் உதவியுடன் கிருமிநாசி கொண்டு சுத்தம் செய்யகின்றனா். மேலும், தோ்வு எழுதக்கூடிய மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் என அனைவரும் சோப்பு அல்லது கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே தோ்வு அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். இதைத் தொடா்ந்து, முகக் கவசம் அணிந்து வர மாணவா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பு நடைபெற்ற தோ்வுகளைக் காட்டிலும், தற்போது, தோ்வு நடைபெறும் அறைகளில் மாணவா்களை, கரோனா தொற்று நோய் பரவாமலிருக்க கூடுதல் இடைவெளி விட்டு அமர வைக்கப்படுகின்றனா். மேலும், தோ்வெழுதும் அறையானது மிகவும் காற்றோட்டமான வசதிகளை கொண்டுள்ளதா? என ஆசிரியா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். இதற்கிடையே, அரசு ஊழியா்கள் கிருமிநாசினியை கொண்டு தினம் தினம் பள்ளிகளில் சுத்தம் செய்து வருகின்றனா். தனியாா் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் என அனைத்திலும் இதே முறையை கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டுமென பள்ளி கல்வித் துறை மூலம் சுற்றறிக்கை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று அனைத்துப் பள்ளிகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகே மாணவா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com