கரோனோ பரவுவது கட்டுப்படுத்தப்படும்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேட்டி

ஈரோடு மாவட்டத்தில்  கரோனோ பரிசோதனைக்காக இதுவரை 74 நபர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்
கரோனோ பரவுவது கட்டுப்படுத்தப்படும்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் பேட்டி

ஈரோடு மாவட்டத்தில்  கரோனோ பரிசோதனைக்காக இதுவரை 74 நபர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் 31 பேர் இன்னும் கண்காணிப்பில் உள்ளதாகவும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் அளித்த பேட்டியில், 

மாநில எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கொண்டுவரப்படும். 

கரோனா தொற்று பாதித்து தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 

தமிழக கர்நாடக பேருந்துகள் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மக்கள் தாங்களாகவே ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துக் கொள்ள வேண்டும். 

இதன் மூலம் கரோனோ பரவுவது கட்டுப்படுத்தப்படும் என்று அவர் பேட்டியளித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com