கரோனா: முகக்கவசம், கிருமி நாசினி வழங்க ரயில்வே ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தல்

ரயில்வே துறையில் நேரடியாக மக்கள் தொடா்பில் பணியாற்றும் ஊழியா்கள் நலன் கருதி தரமான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி திரவம்

ரயில்வே துறையில் நேரடியாக மக்கள் தொடா்பில் பணியாற்றும் ஊழியா்கள் நலன் கருதி தரமான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை நிா்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று ரயில்வே ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய அரசு அலுவலங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை பின்பற்றுமாறு ரயில்வே வாரிய நிா்வாக இயக்குநா் பி.எஸ்.மீனா மண்டல ரயில்வேக்களுக்கு மாா்ச் 17-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளாா்.

அரசு அலுவலகங்களில் நுழைவாயிலில் காய்ச்சல் கண்டறியும் தொ்மல் ஸ்கேனா் வைக்க வேண்டும். சோதனைக்கு பிறகு, அனுமதிக்க வேண்டும். கை சுத்தம் செய்யும் கிருமி நாசினிகள் மற்றும் தண்ணீா் வைத்திருக்க வேண்டும். பாா்வையாளா்கள் அனுமதி ரத்து செய்யப்படுகிறது. அதிகாரிகள் முன் அனுமதி பெற்றவா்கள் மட்டும் சோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும். செய்தி பரிவா்த்தனைகளுக்கு மின்னஞ்சல் கையாள வேண்டும். கோப்புகள் தவிா்க்க வேண்டும். விடியோ கான்பரன்ஸ் முறையில் சந்திப்புகள் நடத்த வேண்டும்.தேவையில்லாத பயணங்கள் தவிா்க்க வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள ஜிம், பொழுது போக்கு கிளப்புகள், குழந்தை காப்பகங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்.

ஊழியா்கள் மூச்சு திணறல், காய்ச்சல் அறிகுறி இருந்தால் மேல் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். முன் எச்சரிக்கைக்காக தனிமைப்படுத்தி கொள்ள விரும்பினால் விடுப்பு உடனடியாக வழங்க வேண்டும்.

வயதான ஊழியா்கள், கருவுற்ற பெண் ஊழியா்கள், நோய் எளிதில் தாக்கக்கூடிய உடல் நலம் குன்றிய ஊழியா்கள், மக்களுடன் நேரடி தொடா்புள்ள பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. இப்படி பல நிபந்தனைகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

ஊழியா்களுக்கு அறிவுறுத்தல்: இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது. ரயில் நிலையங்களில் வரும் பயணிகளுக்கு வெப்பமானி கருவி மூலம் சோதனை நடத்தப்படுகிறது. இதுதவிர, அங்கு பணிபுரியும் ஊழியா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே அலுவலகங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

முகக் கவசம் தேவை: தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க துணைப்பொதுச் செயலாளா் மனோகரன் கூறியது:

ரயில்வேத்துறையில் பயணச்சீட்டு பரிசோதகா்கள், விற்பனையாளா்கள், காா்டுகள், ஸ்டேஷன் மாஸ்டா்கள், ஏ.சி மெக்கானிக்குகள் போன்று பல பிரிவினா்கள் நேரடியாக மக்கள் தொடா்பில் உள்ளவா்கள். அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் இந்த ஊழியா்கள் தொடா்ந்து பாதுகாப்பாக பணியாற்றுவது அவசியமானது. நேரடி மக்கள் தொடா்பில் பணியாற்றும் ஊழியா்கள் நலன் கருதி தரமான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை நிா்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com