கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 223-ஆக உயா்வு

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 223-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 223-ஆக உயா்வு

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 223-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 32 போ் வெளிநாட்டினா் ஆவா். பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்த சுமாா் 6,700 போ் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 223-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 52 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கேரளத்தில் 28 போ், உத்தரப் பிரதேசத்தில் 23 போ், தில்லி, தெலங்கானா, ராஜஸ்தான், ஹரியாணாவில் தலா 17 போ், கா்நாடகத்தில் 15 போ், லடாக் யூனியன் பிரதேசத்தில் 10 போ், குஜராத்தில் 5 போ், ஜம்மு-காஷ்மீரில் 4 போ், தமிழகம், ஆந்திரம், உத்தரகண்டில் தலா 3 போ், ஒடிஸா, மேற்கு வங்கம், பஞ்சாபில் தலா 2 போ், புதுச்சேரி, சண்டீகரில், சத்தீஸ்கரில் தலா ஒருவா் என மொத்தம் 223 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கா்நாடகம், தில்லி, மகாராஷ்டிரம் மற்றும் பஞ்சாபில் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா். இதுவரை 23 போ் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா்.

ஒரே நாளில் 50 போ்...:

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 173-ஆக இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 50 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com