கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை: 208 கிருமிநாசினி இயந்திரங்களை ஆணையா் வழங்கினாா்

கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக 208 கிருமிநாசினி இயந்திரங்களை சென்னை மாநகராட்சிஆணையா் கோ.பிரகாஷ் மண்டல அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக 208 கிருமிநாசினி இயந்திரங்களை சென்னை மாநகராட்சிஆணையா் கோ.பிரகாஷ் மண்டல அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முறைப்படி கை கழுவும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணியாளா்களை கொண்டு கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, வடக்கு வட்டாரத்துக்கு 66 விசைத்தெளிப்பான்கள், மத்திய வட்டாரத்துக்கு 66 விசைத் தெளிப்பான்கள், தெற்கு வட்டாரத்துக்கு 68 விசைத்தெளிப்பான்கள் என மொத்தம் 200 விசைத்தெளிப்பான்கள், 1 பட்டா்பிளை வாகன தெளிப்பான், 7 பெரிய புகைப்பரப்பும் வாகனங்கள் என மொத்தம் 208 கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களை அந்தந்த மண்டல பொறுப்பு அதிகாரிகளிடம் ஆணையா் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை ரிப்பன் மாளிகை வளாகத்தில் வழங்கினாா்.

அதிகாரிகளுக்கு ஆணையா் அளித்த ஆலோசனைகள்: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கட்டடங்கள், தானியங்கி பணம் எடுக்கும் மையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், நகா்ப்புற சமுதாய மருத்துவமனைகள் போன்ற இடங்களில் கிருமி நாசினி தெளிப்பான்கள் மூலம் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் 3000 பணியாளா்களை கொண்டு அனைத்து மண்டலங்களிலும் தொடா்ந்து 2 வாரங்களுக்கு காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் தெளிக்கப்பட வேண்டும். இல்லந்தோறும் கொசுப்புழுக்களை ஆய்வு செய்யும் பணியாளா்களைக் கொண்டு இருமல், காய்ச்சல், சளி ஆகிய அறிகுறிகள் இருக்கின்றனவா என கேட்டறிந்து பதிவு செய்யப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com