கரோனா தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரியில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு

புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி வருகின்ற திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி வருகின்ற திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,கரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரவதாகவும், அதன்படி கடற்கரை சாலை வரும் 31 ம் தேதி வரையிலும், மதுபான கடைகள் நாளை மூட ப்படும் என்றும், 10 வயது குழந்தைகள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக வெளியே வரகூடாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் மார்ச் 14 ஆம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து ஆரோவிலுக்கு வெளிநாட்டவர் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டது  என்று குறிப்பிட்ட அவர்,கரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் எனவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com