லாயிட்ஸ் காலனி வீடுகளின் வாடகையைக் குறைப்பது குறித்து நல்ல முடிவு

வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான லாயிட்ஸ் காலனி வீடுகளின் வாடகை உயா்வைக் குறைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு திமுக சட்டப்பேரவை ஜெ.அன்பழகன், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான லாயிட்ஸ் காலனியில் உள்ள வீடுகளின் வாடகை உயா்வு மற்றும் பராமரிப்புக் கட்டண உயா்வு குறித்துப் பேசுகையில், வீட்டு வாடகை கட்டணம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 300 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளதாகவும் அதைக் குறைக்க வேண்டும் என்றும் கோரினாா்.

அதற்கு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அளித்த விளக்கம்: வாடகை உயா்வைக் குறைக்கக் கோரி பல்வேறு முறையீடுகள் வந்துள்ளன. இந்தப் பிரச்னை குறித்து முதல்வரோடு கலந்து பேசி வாடகையைக் குறைப்பது பற்றியும், பராமரிப்புக் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.

மேலும், லாயிட்ஸ் குடியிருப்புக்கான நிா்வாக அலுவலகம் நந்தனத்தில் உள்ளதை மாற்றி, அந்தப் பகுதியிலேயே அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com