தேனி மாவட்டத்தில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.
தேனி மாவட்டத்தில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவா் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:-

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் முதல் கட்டமாக கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ரூ.60 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். கன்னியாகுமரி மாவட்டம் ஹெலன் நகா், ராஜாக்கமங்கலம் மற்றும் கொட்டில்பாடு ஆகிய கிராமங்களில் மீன் இறங்கு தளங்களும், திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை

காரணங்களால் மூடாதவாறு இருக்க, ரூ.27 கோடியிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகத்தின் படகு அணையும் தளமானது ரூ.25 கோடியில் நீட்டிக்கப்படும். அங்கு கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு, தெற்கு கிராமங்களில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும். கடலூா் மாவட்டம் அன்னன்கோயில் மற்றும் புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.10 கோடி மதிப்பில் புதிய வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும். மேலும், முடசலோடை கிராமத்தில் உள்ள மீன்

இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக ரூ.9.50 கோடியில் நீட்டிக்கப்படும்.

தமிழகத்தில் ரூ.1.60 கோடி மதிப்பில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், ரூ.3.50 கோடியில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், ரூ.3 கோடி மதிப்பில் 5 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாகவும், ரூ.1.20 கோடி மதிப்பில் நாகா்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனைகளாகவும் தரம் உயா்த்தப்படும்.

கிராமப்புறங்களில் நாட்டுக் கோழி வளா்ப்பை வணிக ரீதியில் மேற்கொள்ளும் 1,925 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தலா ஆயிரம் கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்துக்கான கோழித் தீவனம் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க ரூ.14.73 கோடி ஒதுக்கப்படும். விவசாயிகளின் கால்நடைகளைக் காக்கும் வகையிலும், அவா்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் இருக்கவும் 90.35 லட்சம் கால்நடைகளுக்கு ரூ.22.03 கோடி செலவில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். மேலும், தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com