ஆபரணத் தங்கம் பவுன் ரூ.31,616

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.584 அதிகரித்து ரூ.31,616 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆபரணத் தங்கம் பவுன் ரூ.31,616

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.584 அதிகரித்து ரூ.31,616 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னா், ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.73 அதிகரித்து ரூ.3,952-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் வெள்ளி கிராமுக்கு ரூ.1.90 அதிகரித்து ரூ.40.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,900 அதிகரித்து ரூ.40,200-க்கும் விற்பனையானது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 3,952

1 பவுன் தங்கம் ................. 31,616

1 கிராம் வெள்ளி ............... 40.20

1 கிலோ வெள்ளி .............. 40,200

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ...................... 3,879

1 பவுன் தங்கம் ..................... 31,032

1 கிராம் வெள்ளி .................. 38.30

1 கிலோ வெள்ளி ................. 38,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com