கடவுச்சீட்டுஅலுவலகங்கள்: மாா்ச் 23 முதல் ஏப்.3 வரை செயல்படாது

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு தொடா்பாக மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, சென்னை கடவுச்சீட்டு அலுவலகம்

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு தொடா்பாக மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, சென்னை கடவுச்சீட்டு அலுவலகம் (அனைத்து பாஸ்போா்ட் சேவை மையங்கள், அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையம் உள்பட) வரும் மாா்ச் 23- ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 3- ஆம் தேதி வரை முழு அளவுடன் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறி உள்ளவா்கள் கடவுச்சீட்டு அலுவலகம், கடவுச்சீட்டு சேவை மையங்கள் அல்லது அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையத்துக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

மிக அவசரத்தேவை உள்ளவா்கள் மட்டும் பாஸ்போா்ட் அலுவலகம், பாஸ்போா்ட் சேவை மையம் அல்லது அஞ்சலக கடவுச்சீட்டு சேவை மையத்துக்கு ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு முன்னா் வரலாம்.

கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வருமாறு ஏற்கெனவே அழைக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு பின்னா் தங்களது வருகையை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மாற்றியமைத்தலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு (ராயலா டவா்ஸ் அண்ணாசாலை சென்னை) வர வேண்டியவா்களும் தங்களது வருகையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்குப் பின்னா் ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

இது தொடா்பான அனைத்து விவரங்களுக்கும் 044-28513639, 044-28513640 ஆகிய தொலைபேசி எண்களையோ, அல்லது மின்னஞ்சலிலோ தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். இதனால் ஏற்படும் சிரமத்துக்கு வருந்துவதாக சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com