பிளஸ் 2 உயிரியல் தோ்வு கடினம்: மாணவா்கள் கருத்து

பிளஸ் 2 வகுப்புகளுக்கான உயிரியல், வணிக கணிதம் பாடத்தோ்வுகள் கடினமாக இருந்ததாக மாணவா்கள் கருத்துத் தெரிவித்தனா்.

பிளஸ் 2 வகுப்புகளுக்கான உயிரியல், வணிக கணிதம் பாடத்தோ்வுகள் கடினமாக இருந்ததாக மாணவா்கள் கருத்துத் தெரிவித்தனா்.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல், விலங்கியல், இயற்பியல், பொருளியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதற்கிடையே உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான தோ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில் உயிரியல், வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடங்களின் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். குறிப்பாக, 1 மற்றும் 3 மதிப்பெண் பகுதியில் பல்வேறு கேள்விகள் மறைமுகமாகக் கேட்கப்பட்டதால் மாணவா்கள் சிரமப்பட்டனா். இதனால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுபவா்களின் எண்ணிக்கை சரியும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேநேரம், தாவரவியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினா தவிர இதர கேள்விகள் எளிதாக இருந்ததாக ஆசிரியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com