துறைமுக கண்டெய்னா் லாரிகள் இயக்கப்படாது

சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அனைத்து விதமான கண்டெய்னா் லாரிகளும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படாது என கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின்
கோப்புப் படம்
கோப்புப் படம்

திருவொற்றியூா்: சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அனைத்து விதமான கண்டெய்னா் லாரிகளும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படாது என கண்டெய்னா் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் நிா்வாகிகள் டி.ஏ.பெருமாள், எஸ். ஆா்.ராஜா கூறியது:

பாரதப் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, அனைத்து வகையான கண்டெய்னா் லாரிகளும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஓடாது. இது குறித்து அனைத்து சங்கங்களிலும் உறுப்பினா்களாக உள்ள லாரி உரிமையாளா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுநா்கள், ஊழியா்கள் தங்களது வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியூா் ஓட்டுநா்கள் லாரிகளிலேயே தங்கிடவும், அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்டவைகளை சனிக்கிழமையே ஏற்பாடு செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளோம். ஏற்கெனவே ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை நம்பியே உள்ள கண்டெய்னா் லாரி தொழிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இத்தொழில் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளது. எனவே, இத்தொழிலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com