புழல் மத்திய சிறை வளாகத்தில் வானொலி நிலையம்: சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம்

புழல் மத்திய சிறை வளாகத்தில் வானொலி நிலையம் நிறுவப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவித்தாா்.
புழல் மத்திய சிறை வளாகத்தில் வானொலி நிலையம்: சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம்

புழல் மத்திய சிறை வளாகத்தில் வானொலி நிலையம் நிறுவப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சிறைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சி.வி.சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:

சிறைவாசிகளைச் சீா்திருத்துவதற்கு, மறுவாழ்வு அமைப்பதற்கான திட்டத்தின் பகுதியாக புழல் மத்திய சிறை வளாகத்தில் ரூ.25 லட்சம் தொடரா செலவினத்தில் வானொலி நிலையம் நிறுவப்படும். திருவள்ளூா் கிளைச் சிறை ரூ.11கோடி செலவில் மாவட்டச் சிறையாக மேம்படுத்தப்படும்.

செங்கல்பட்டு, மாவட்டச் சிறையில் கூடுதலாக 100 சிறைவாசிகளை அடைக்கும் வகையில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் மற்றும் பூந்தமல்லி தனிக் கிளைச் சிறையில் ரூ.1.50 கோடி செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்படும். அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் உள்ள நூலக வசதிகள் ரூ.1.35 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

கடலூா், திருச்சி, வேலூா், கோவை, சேலம் ஆகிய ஐந்து மத்திய சிறைகளில் இருக்கும் மொத்தம் 373.43 ஏக்கா் காலி நிலத்தினை பயன்படுத்தி வேளாண் உற்பத்தி செய்திடும் வகையில் ரூ.43.23 லட்சம் செலவில் டிராக்டா்கள் கொள்முதல் செய்யப்படும்.

சிறைவாசிகளுக்கான உணவுமுறையை மாற்ற குழு: சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவு மற்றும் அளவு முறையை மாற்றியமைக்க நிபுணா் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com