Enable Javscript for better performance
சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு

    By DIN  |   Published on : 21st March 2020 12:48 PM  |   அ+அ அ-   |    |  

    tn assembly

    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

    சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கரோனா வைரஸ் தொற்று குறித்து கேள்வி எழுப்பினாா். அப்போது பேசிய அவா், சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை உடனடியாக தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா். 

    இதைத்தொடா்ந்து, அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் பேரவைத் தலைவா் பி.தனபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். 

    மேலும் மார்ச் 31ஆம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர் காலை, மாலை என இருவேளையும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 9ஆம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்ட நிலையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக முக்கூட்டியே ஒத்திவகைக்ப்படுகிறது.  
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai