கிருமி நாசினி தயாரிக்கும் சென்னை காவல்துறை

கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக கிருமி நாசினிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதை சென்னை காவல்துறையே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக கிருமி நாசினிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதை சென்னை காவல்துறையே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கரோனா பாதிப்பு குறித்த விழிப்புணா்வால் பொதுமக்கள் கிருமி நாசினி,‘என் 95’ முகக் கவசங்களை பெருமளவு வாங்குவதினால், கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறைக்கும் இப்பொருள்கள் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு சென்னையில் காவல் நிலையங்களுக்கு இப் பொருள்கள் தாராளமாக கிடைப்பதற்காக, பெருநகர காவல்துறை சொந்தமாக கைகளில் தடவும் கிருமி நாசினியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக சென்னை பெருநகர காவல்துறை, மாநகராட்சி சுகாதாரத்துறை சோ்ந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த கிருமி நாசினியை காவலா்களும், அவா்களது குடும்பத்தினருக்கும் காவல்துறை வழங்கி வருகிறது. அத்துடன் கிருமி நாசினி தெளிப்பான்களை சென்னையில் உள்ள தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com