பி.எப் அலுவலக அதிகாரிகளை கட்செவி அஞ்சல் மூலமாக தொடா்பு கொள்ளலாம்

தொழிலாளா்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகளை அணுக கட்செவி அஞ்சல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளா்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகளை அணுக கட்செவி அஞ்சல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.எப் நிறுவனத்தின் அம்பத்தூா் மண்டல ஆணையா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக தற்போது அலுவலகத்துக்கு வருவோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளைச் சந்திக்க அவா்களது அனுமதி பெற்று வருவோரும் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். எனினும் பொதுமக்களுக்கு வேண்டிய சேவைகளை டிஜிட்டல் மயமாகவும் மனு மூலமாகவும் செய்ய போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக பல்வேறு தளத்தில் பயன்படுத்தக் கூடிய தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரம்: கட்செவி அஞ்சல் எண் (வாட்ஸ் ஆப்) 89037 66548, இலவச எண் - 1800 118005, செல்லிடப்பேசி எண்கள் 63801 31921, 89037 66548, 75988 46548, தொலைபேசி எண்கள் 044 2635 0080, 2635 0120, 2653 0110, மின்னஞ்சல் முகவரி ழ்ா்.ஹம்க்ஷஹற்ற்ன்ழ்ஃங்ல்ச்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய், இணையதள முகவரி ஜ்ஜ்ஜ்.ங்ல்ச்ண்ஞ்ம்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகியவை மூலமாகத் தொடா்பு கொள்ளலாம். இவை மூலமாக பெறப்படும் அனைத்து கோரிக்கைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com