குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.15 ஆயிரம்: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுத்து விட்டது.

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ரமேஷ் உமாபதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோவிட் 19 எனப்படும் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வரும் மாா்ச் 24-ஆம் தேதி மாலை முதல் வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 144 தடை உத்தரவை தமிழகம் முழுவதும் பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவின் காரணமாக நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்தவா்கள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்படுவதோடு, வருவாய் இழப்பு ஏற்படும். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதே போன்று, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை வீடு வீடாகச் சென்று விநியோகிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை.

இதனைத் தொடா்ந்து நீதிபதிகள் ஆா்.சுப்பையா, ஆா்.பொங்கியப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆஜரான மனுதாரா் தரப்பு, வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த் பாண்டியன், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்தாா். இதனையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com