வாராணசியில் தவிக்கும் ஈரோட்டை சேர்ந்த 18 பேருக்கு அரசு உதவ கோரிக்கை

ஈரோட்டில் இருந்து காசிக்கு சுற்றுலா சென்ற 18 பேர் வாராணசியில் இருந்து வர முடியாமல் தவிப்பதால், அவர்களுக்கு அங்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாராணசியில் தவிக்கும் ஈரோட்டை சேர்ந்த 18 பேருக்கு அரசு உதவ கோரிக்கை

ஈரோட்டில் இருந்து காசிக்கு சுற்றுலா சென்ற 18 பேர் வாராணசியில் இருந்து வர முடியாமல் தவிப்பதால், அவர்களுக்கு அங்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு சூளை மற்றும் மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 45 பேர் காசிக்கு சுற்றுலா சென்றனர். இங்கிருந்து ரயில் மூலம் முக்கிய நகரங்களுக்கு சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் பல்வேறு கோவில்களுக்கு சென்றனர். இறுதியாக வாராணசியில் இருந்து கோவைக்கு விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்தனர். கடந்த 23 ஆம் தேதி 40 பேருக்கு பயணச்சீட்டு கிடைத்தது. அவர்கள் ஊர் திரும்பினர். மீதமுள்ள 18 பேருக்கு கடந்த 24 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் விமானத்தில் முன்பதிவு செய்தனர். 

அதற்குள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்நாட்டு விமான சேவை ரத்தானது. இதனால் இவர்கள் அனைவரும் வாரணாசியில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இதுகுறித்து அவர்களது உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் பூபதி என்பவர் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் வந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் ஆகியோரிடம் இன்று மனு அளித்தனர். அவர்களை தனி வாகனம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யக் கோரினார்.

ஆனால் அவ்வாறு செய்ய இயலாது, அவர்கள் அங்கேயே பத்திரமாக இருக்கட்டும். எந்த இடத்தில் இருந்தும், எந்த இடத்துக்கும், எவரையும் அழைத்துச்செல்ல  இயலாது என ஆட்சியர் கூறினார். இருப்பினும் அம்மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் பேசி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com