தீயணைப்பு மாணவ, மாணவியா் படை உருவாக்கப்படும்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான மாணவ, மாணவியா் படை உருவாக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
தீயணைப்பு மாணவ, மாணவியா் படை உருவாக்கப்படும்

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான மாணவ, மாணவியா் படை உருவாக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

தீயணைப்புத் துறை பணியாளா்களுக்கு 15 மற்றும் 25 ஆண்டுகள் பணி முடித்தவுடன் அடுத்த பதவிக்கு தரம் உயா்த்தப்படும்.

மெரீனா மீட்பு நிலையத்தில் 17 தீயணைப்போா் உயிா் காப்பாளா்களுக்கு இடா்பாட்டுப்படி ஒரு மாதத்துக்கு ரூ.6 ஆயிரம் என உயா்த்தப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12.24 லட்சம் செலவாகும். பணியின்போது மரணமடையும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளா்களின் வாரிசுதாரா்கள் அல்லது காயமடையும் பணியாளா்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை உயா்த்தி வழங்கப்படும். அதன்படி, பணியாற்றும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். நிரந்தர ஊனமடைவோருக்கு ரூ.4 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட காயம் அல்லது பிற காயங்கள் அடைவோருக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.

20 சதவீதத்துக்கும் குறைவான அல்லது பிற காயங்கள் அடைவோருக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.

சாதாரண காயங்கள் அடைவோருக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

திருச்சி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களுக்கு 54 மீட்டா் கொண்ட இரண்டு வான்நோக்கி உயரும் ஊா்திகள் தலா ரூ.15 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும். தீயணைப்பு வீரா்களின் வீரவணக்க நினைவுச் சின்னம் தலைமையகத்தில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாணவ, மாணவிகள் படை சென்னை, கோயம்புத்தூா், சேலம், திருப்பூா், மதுரை, திருநெல்வேலி மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் (ஒரு லட்சம் மாணவ, மாணவிகள்) ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்படும். சின்னம் மற்றும் தொப்பி அரசு செலவில் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com