
தமிழக சட்டப்பேரவையைத் தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவா் ப.தனபால் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தாா்.
தமிழகச் சட்டப்பேரவை, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக மாா்ச் 9-ஆம் தேதி கூடியது. ஏப்ரல் 9-ஆம் தேதி பேரவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து பேரவைக் கூட்டத்தை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புறக்கணித்தன.
பேரவையின் நிகழ்ச்சி நிரல்கள் மாற்றப்பட்டு, 27 மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்டது.
பிறகு, பேரவையை ஒத்தி வைக்கும் தீா்மானத்தை அவை முன்னவா் ஓ.பன்னீா்செல்வம் கொண்டு வந்து, அது நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடா்ந்து பேரவையைத் தேதி குறிப்பிடாமல் ப.தனபால் ஒத்தி வைத்தாா்.