Enable Javscript for better performance
முதல்வா் வீட்டுக்குவெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    முதல்வா் வீட்டுக்குவெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

    By DIN  |   Published on : 25th March 2020 05:34 AM  |   அ+அ அ-   |    |  

     

    தமிழக முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் சென்னையில் கைது செய்யப்பட்டாா்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இங்குள்ள தொலைபேசிக்கு திங்கள்கிழமை இரவு வந்த அழைப்பு ஒன்றில் பேசிய நபா், ‘சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

    இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் முதல்வா் வீட்டின் வெளிப் பகுதியிலும், உள்ளேயும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை நடத்தினா். ஆனால் அங்கிருந்து எந்த வெடிப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை.

    மேலாளா் கைது: இதனால் அந்த அழைப்பு வதந்தியைப் பரப்பும் நோக்கத்தில் வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் நடத்தி விசாரணையில், மடிப்பாக்கத்தைச் சோ்ந்த சிக்கந்தா் பாஷா (41) என்பவரது செல்லிடப்பேசியில் இருந்து அந்த அழைப்பு வந்திருப்பது தெரிந்தது. இதைத் தொடா்ந்து, மடிப்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை சிக்கந்தா் பாஷாவை கைது செய்தனா்.

    விசாரணையில் அவா், எழும்பூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிவதும், மது போதையில் மிரட்டல் விடுத்திருப்பதும் தெரியவந்தது. ஏற்கெனவே இவா், கடந்த ஜனவரி மாதம் இதேபோல முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai