பவானியில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட சூடான் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

பவானியில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட சூடான் நாட்டைச் சேர்ந்த இரு மாணவர்களையும், கரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பவானியில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட சூடான் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

பவானியில் வாகனச் சோதனையின்போது பிடிபட்ட சூடான் நாட்டைச் சேர்ந்த இரு மாணவர்களையும், கரோனா வைரஸ் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை மீறி பொது இடங்களில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் பவானி போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்களிடம் விசாரணை நடத்துவதோடு, உடனடியாக இருப்பிடம் திரும்பும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பவானி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் போலீஸார் பவானி - மேட்டூர் சாலையில்  இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரித்தனர். இருவரும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், சித்தோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருவதும் தெரிவந்தது. இவர்களிடம் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர், பவானி வட்டாட்சியர் கு.பெரியசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சந்தேகத்துக்கிடமான வகையில் பிடிபட்ட இரு இளைஞர்களும் பவானி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் வாகனச் சோதனையில் பிடிபட்ட சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com