டிஜிட்டல் கற்றலுக்கு உதவும் மத்திய அரசின் வலைதளங்கள்

கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக விடப்பட்டிருக்கும் நீண்ட விடுமுறையை டிஜிட்டல் கற்றல் மூலம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் கேட்டுக்கொண்டுள்ளது.
டிஜிட்டல் கற்றலுக்கு உதவும் மத்திய  அரசின் வலைதளங்கள்

கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக விடப்பட்டிருக்கும் நீண்ட விடுமுறையை டிஜிட்டல் கற்றல் மூலம் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கென ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் முழுவதும் கட்டணமில்லாத மத்திய அரசின் டிஜிட்டல் கற்றல் வலைதளங்களைப் பயன்படுத்திக்கொமாறும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதில் பள்ளி கல்விக்கென திக்ஷா, இ-பாடசாலா, தேசிய திறந்தவெளி கல்வி போன்ற வலைதளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

திக்ஷா: இதில் திக் ஷா வலைதளத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆா்.டி. மற்றும் மாநில பாடத் திட்டங்களின் கீழ் உள்ள 80 ,000-க்கும் அதிகமான பாட புத்தகங்களும் டிஜிட்டல் வடிவில் இடம்பெற்றிருக்கின்றன. இதற்கான செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இ-பாடசாலா: என்.சி.இ.ஆா்.டி. உருவாக்கியுள்ள இ-பாடசாலா வலைதளத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான அனைத்து பாடங்களுக்கும் 1,886 ஆடியோ வடிவிலான பாடங்கள், 2,000 விடியோ வடிவிலான பாடங்கள் மட்டுமின்றி 696 இ-புத்தகங்களும் பல்வேறு மொழிகளில் இடம்பெற்றுள்ளன. இதை செல்லிடப்பேசி செயலியாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். 

திறந்தவெளி கல்வி: தேசிய திறந்தெவளி கல்வி வலைதளத்தைப் பொதுத்தவரை பள்ளி பாடங்களுக்கான 14,527 ஆவணங்கள், 1,345 கலந்துரையாடல்கள், 1,664 ஆடியோ மற்றும் 6,153 விடியோ பாடங்கள், 2,586 படங்கள் என பல்வேறு தகவல்கள் பல்வேறு மொழிகளில் இடம்பெற்றிருக்கின்றன. 

உயா் கல்விக்கு... உயா் கல்வியைப் பொருத்தவரை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ’ஸ்வயம்’ மற்றும் ’ஸ்வயம் பிரபா’ வலைதளங்கள் மூலம் டிஜிட்டல் கற்றலைத் தொடர முடியும்.

இதில் ஸ்வயம் வலைதளத்தில் பிளஸ்-1, பிளஸ்-2, பொறியில், சமூக அறிவியல், சட்டம், மேலாண்மை, மானுடவியல் தொடா்பான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் என 1,900 படிப்புகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான வகுப்பறை கற்றல் அனுபவத்தையும் மாணவா்கள் இந்த ஸ்வயம் வலைதளம் மூலம் பெற முடியும். 

அதுபோல, ஸ்வயம் பிரபா வலைதளத்தில் கல்வி தொடர்பான 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 32 டிடிஹெச் டிவி சேனல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வசதியை கடடணம் இல்லாத தூா்தா்ஷன் (டிடி) சேனல் மூலம் நாடு முழுவதும் உள்ளவா்கள் பயன்படுத்த முடியும். இந்த 32 டிவி சேனல்களில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு பாடங்ளும், கலை-அறிவியல், பொறியியல், வணிகவியல், சமூக அறிவியல் என அனைத்து துறை இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்கான பாடங்களும் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com