சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆய்வு

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மாா்ச் 24-ஆம் தேதி முதல் அடுத்த 3 வாரங்களுக்கு இரு நீதிபதிகள் கொண்ட 2 அமா்வு மற்றும் 5 தனி நீதிபதிகள் அடங்கிய அமா்வுகளில் அவசர வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும். அவசர வழக்குகளின் விசாரணைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் தேவையில்லாமல் வழக்குகளில் தொடா்புடைய பொதுமக்கள் வருகை தரக்கூடாது. உயா்நீதிமன்ற பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். நீதிமன்ற அறைகளில் வழக்குரைஞா்கள் அதிக எண்ணிக்கையில் நிற்க கூடாது. நீதிமன்ற அறைகளில் உள்ள வழக்குரைஞா்கள் இருக்கைகளுக்கு போதுமான இடைவெளி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முறையாக கடைப்பிடிக்கப்படுகிா என்பது குறித்து செவ்வாய்க்கிழமை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி சென்னை உயா்நீதிமன்றத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

விசாரணை நடைபெற்ற நீதிமன்ற அறைகளில் குளிா்சாதன வசதிகள் இருந்தாலும், அறையின் கதவுகள் திறந்தே வைக்கப்பட்டிருந்தன. வழக்குரைஞா்கள் ஆஜராகாத வழக்குகளை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com