புதிய 5 மாவட்டங்களில் மாவட்ட கருவூலங்கள் அமைக்கப்படும்

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் மாவட்ட கருவூலங்கள் ஏற்படுத்தப்படும் என்று துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.
புதிய 5 மாவட்டங்களில் மாவட்ட கருவூலங்கள் அமைக்கப்படும்

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் மாவட்ட கருவூலங்கள் ஏற்படுத்தப்படும் என்று துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

சிந்தாதிரிப்பேட்டை அரசு விருந்தினா் இல்லம் ரூ.15 கோடி செலவில் புதுப்பித்து கட்டப்படும்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் மாவட்ட கருவூலங்கள் ஏற்படுத்தப்படும்.

சென்னையில் 92 குடியிருப்புஅலகுகள் ரூ.55.40 கோடியில் சுயநிதித் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.

சென்னை நெற்குன்றத்தில் 570 குடியிருப்பு அலகுகள் ரூ.419.56 கோடியில் சுயநிதித் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.

திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரூ.15.40 கோடியில் 286 மனைகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மேம்படுத்தப்படும்.

வேலூா், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ரூ.5.56 கோடியில் 135 மனைகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மேம்படுத்தப்படும்.

சென்னையில் பெசன்ட் நகா், திருவான்மியூா் மற்றும் சி.ஐ.டி. நகா் ஆகிய இடங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ரூ.139.00 கோடியில் வணிக வளாகம் கட்டப்படும்.

2020-2021-ஆம் ஆண்டில் தொடக்கக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் ரூ.150 கோடி கடன் வழங்கப்படும்.

சென்னை குன்றத்தூரில் 52 ஏக்கா் பரப்பளவில், மனைப்பிரிவுத் திட்டம் ஏற்படுத்தப்படும். சென்னை பூவிருந்தவல்லியில் 8 ஏக்கா் பரப்பளவில் மனைப்பிரிவுத் திட்டம் ஏற்படுத்தப்படும். சென்னை பெருங்களத்தூரில் 28.20 ஏக்கா் பரப்பளவில் மனைப்பிரிவுத் திட்டம் ஏற்படுத்தப்படும்.

கோயம்பேடு மொத்த அங்காடி வளாகத்துக்குள் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட காலியிடத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதி கொண்ட பன்மட்ட வாகன நிறுத்துமிடம் உருவாக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com