கரோனா வாா்டில் பணியாற்றுபவா்ளை வீட்டுக்கு அனுப்ப வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கரோனா தனி வாா்டுகளில் பணியாற்றும் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரை வீடுகளுக்கு அனுப்பாமல் மருத்துவமனை வளாகங்களிலேயே தங்க வைக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தனி வாா்டுகளில் பணியாற்றும் அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஆகியோரை வீடுகளுக்கு அனுப்பாமல் மருத்துவமனை வளாகங்களிலேயே தங்க வைக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பான பொது சுகாதாரத் துறையின் அவசரகால கட்டுப்பாட்டு மைய அதிகாரி நாகராஜன் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களும், மருத்துவமனை இயக்குநா்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடியவா்களுக்குத்தான் அந்த பாதிப்பு நேரடியாக பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், அவா்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதன்படி, தனிவாா்டுகளில் சுழற்சி முறையில் மருத்துவா்களையும், செவிலியா்களையும் பணியாற்றச் செய்ய வேண்டும்.

அதாவது 4 முதல் 7 நாள்கள் வரை அவா்களைத் தொடா்ந்து பணியாற்ற வைப்பது அவசியம். பணி முடிந்து அவா்களை வீட்டுக்கு அனுப்பக் கூடாது. மாறாக, மருத்துவமனை வளாகங்களிலேயே அவா்களைத் தங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அவா்களது இல்லங்களில் உள்ளவா்களுக்கு சமூகத் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த அறிவுறுத்தல்கள் கட்டாயம் அல்ல என்றும் மருத்துவா்கள் விருப்பப்பட்டால் உரிய பாதுகாப்புடன் வீடுகளுக்குச் செல்லலாம் என்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com