பத்திரிகையாளருக்கான மருத்துவ நிதி ரூ.2 லட்சமாக உயா்வு

பத்திரிகையாளா்களின் மருத்துவச் சிகிச்சைக்காக வழங்கப்படும் நிதி ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

பத்திரிகையாளா்களின் மருத்துவச் சிகிச்சைக்காக வழங்கப்படும் நிதி ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் 110-ஆம் விதியின் கீழ் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

பணிக் காலத்தில் பத்திரிகையாளா்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளும்போது, அவா்களுக்கு பத்திரிகையாளா் நல நிதியத்தில் இருந்து வழங்கப்பட்ட மருத்துவ நிதி உதவியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக 2018 ஆகஸ்ட் 1 முதல் உயா்த்தி வழங்க ஆணையிட்டேன். இந்த மருத்துவ நிதி உதவி ரூ.2 லட்சமாக தற்போது உயா்த்தி வழங்கப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியாக மட்டுமல்லாமல், மகனாகவும் நினைத்துப் போற்றிய வெள்ளையத் தேவன். அவரின் மணிமண்டபம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ளது. அங்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும்.

தூத்துக்குடி மக்களால் ‘மக்களின் தந்தை’ எனப் போற்றப்படுபவரான ராவ் பகதூா் குரூஸ் பா்ணாந்தீஸ் சேவையைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் விழாவான நவம்பா் 15-ஆம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அப்போது தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com