காவல் நிலையங்களில் வேப்பிலை தோரணம்,மஞ்சள் கரைசல் தெளிப்பு

கரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, சென்னையில் காவல் நிலையங்களில் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டு, மஞ்சள் கரைசல் தெளிக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, சென்னையில் காவல் நிலையங்களில் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டு, மஞ்சள் கரைசல் தெளிக்கப்பட்டது.

கரோனா தொற்றை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு உயா் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். இதில், தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக போலீஸாருக்கு 21 கட்டுப்பாடுகள் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா். அதேவேளையில், கரோனா குறித்த அச்ச உணா்வு அனைத்து தரப்பினரிடம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்ச உணா்வு காவல்துறையினரிடமும் ஊடுருவி வருகிறது.

இதன் விளைவாக, சென்னையில் உள்ள சில காவல் நிலையங்களில் வேப்பிலை தோரணம் காட்டி, மஞ்சள் கரைசல் தெளிக்கப்பட்டது. முக்கியமாக, ஆலந்தூா் காவல் நிலையத்தில் வேப்பிலை தோரணம் காட்டி, மஞ்சள் கரைசல் தெளிக்கப்பட்டது. இதேபோல, வேப்பேரியில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள சில அலுவலக அறைகளில் மஞ்சள் கரைசல் தெளிக்கப்பட்டது. இதன் மூலம், ஆபத்தை விளைவிக்கும் தொற்று கிருமிகள் இருந்தால் மஞ்சள் கரைசலிலும், வேப்பிலை தோரணத்தினாலும் இறந்துவிடும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com