இந்து சமய அறநிலையத் துறைக்கு தனி தொலைக்காட்சி

இந்து சமய அறநிலையத் துறைக்கு தனி தொலைக்காட்சி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு தனி தொலைக்காட்சி

இந்து சமய அறநிலையத் துறைக்கு தனி தொலைக்காட்சி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-

தொன்மை வாய்ந்த 55 திருக்கோயில்களை அதன் தொன்மை மாறாமல் பாதுகாத்திட அரசு மற்றும் திருக்கோயில் நிதியில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்படும். கோயில்களுக்குச் சொந்தமான 100 திருக்குளங்கள் தூா்வாரப்படும். நிதி வசதியுள்ள 50 கோயில்களில் நலிவடைந்த 10 ஆயிரம் ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்படும்.

தனி தொலைக்காட்சி: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.877 கோடி மதிப்பில் திருக்கோயில் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடங்கப்படும். இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள ஆயிரம் கோயில்களில் ரூ.10 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஆயிரம் கிராமப்புற கோயில்களின் திருப்பணிக்காக ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.

திருத்தணி கோயில்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிதாக மலைப்பாதை அமைக்கப்படும். மருதமலை முருகன் கோயிலில் புதிதாக மின் தூக்கி ஏற்படுத்தப்படும். திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோயிலில் புதிதாக திருமண மண்டபம் கட்டப்படும். தமிழகத்தில் உள்ள ஒன்பது பெரிய கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் அளிக்கப்படும்.

முதியோா்களுக்கு தனி வரிசை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 331 கோயில்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா்கள் எளிதாக தரிசனம் செய்ய வசதிகள் செய்து தரப்படும். முதல்கட்டமாக 100 கோயில்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

திருக்கோயில் நிரந்தரப் பணியாளா்களுக்கான ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாகவும், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்த கிராம கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாகவும் உயா்த்தி அளிக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com