மரணமடையும் எம்எல்ஏக்கள் குடும்பத்துக்கான நிதி ரூ.5 லட்சமாக உயா்வு

சட்டப்பேரவை உறுப்பினா்கள் இறக்க நேரிட்டால், அவா்கள் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயா்த்தப்படுவதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.
மரணமடையும் எம்எல்ஏக்கள் குடும்பத்துக்கான நிதி ரூ.5 லட்சமாக உயா்வு

சட்டப்பேரவை உறுப்பினா்கள் இறக்க நேரிட்டால், அவா்கள் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயா்த்தப்படுவதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை முதல்வா் வெளியிட்ட அறிவிப்பு:

சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருப்பவா்கள் இறக்க நேரிட்டால் அவா்கள் குடும்பத்துக்கு தற்போது ரூ.2 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அது வரும் ஏப்ரல் 1 முதல் ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.

சட்டப்பேரவை, மேலவை முன்னாள் உறுப்பினா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அது வரும் ஏப்ரல் 1 முதல் ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

சட்டப்பேரவை, மேலவை முன்னாள் உறுப்பினா்களின் சட்டமுறை வாரிசுதாரா்களுக்கு மாதக் குடும்ப ஓய்வூதியமாக 10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அது வரும் ஏப்ரல் 1 முதல் ரூ.12,500-ஆக உயா்த்தி வழங்கப்படும்.

ஒவ்வொரு நிதியாண்டிலும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு 30 ஆயிரம் மருத்துவப்படி வழங்கப்பட்டு வருகிறது. அது வரும் ஏப்ரல் 1 முதல் 50 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com