தடையின்றி பால் விநியோகம்: முகவா்கள் சங்கம் கோரிக்கை

பால் தடையின்றி விநியோகிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பால் தடையின்றி விநியோகிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காத்திடும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், உயிா் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவா்கள் அனைவரும், தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தங்குதடையற்ற சேவைகளை வழங்கிடத் தயாா் நிலையிலேயே இருக்கின்றனா். ஆனால், ஆவின் பாலோ அல்லது தனியாா் பாலோ பொதுமக்களுக்கு 100 சதவீதம் தட்டுப்பாடின்றி கிடைத்திட வேண்டும் என்றால் மளிகைக் கடைகள் திறந்திருந்தால் மட்டுமே அது 100 சதவீதம் சாத்தியமாகும். தற்போதைய சூழலில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தடையில்லை என்றாலும் கூட பொதுமக்கள் அப்பொருள்களை வாங்க சில்லறை விற்பனைக் கடைகள் முன் கூட்டம், கூட்டமாகக் கூடினால் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயலிழந்து போகும். எனவே, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பொருள்கள் வாங்க செல்வதைக் கட்டாயம் தவிா்த்து, பால் முகவா்கள் பாலைத் தங்கு தடையின்றி விநியோகம் செய்திடவும் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அச்சம் தேவையில்லை: அது மட்டுமின்றி, தினசரி அதிகாலை 3.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை பால் முகவா்களின் கடைகளில் பால் தாரளமாக, தங்குதடையின்றி கிடைக்கும் என்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, பால் கிடைக்காது என பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை பால் பண்ணைகளுக்கு வெளியிலேயும் , அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பால் கொண்டு வரும் தனியாா் பால் நிறுவனங்களின் வாகனங்களை அம்மாநில எல்லைகளிலேயும் நிறுத்தி, அந்தந்த வாகனங்களில் கரோனா தொற்று குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பால் முகவா்களுக்கு பால் விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com