ஊரடங்கில் கோவை

முழு ஊரடங்கு உத்தரவை அடுத்து கோவையில் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர்
ஊரடங்கில் கோவை

முழு ஊரடங்கு உத்தரவை அடுத்து கோவையில் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் அது குறித்து தங்கள் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கேட்டுக்கொண்டனர். கோவையில் பல்வேறு பகுதிகளில் தடுப்பு கம்பிகள் வைத்து  வாகனங்கள் போன்றவை செல்ல கூடாது எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் தூய்மை பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்கள் சாலையோரம் வசித்து வருபவர்கள் உணவருந்தினர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள உழவர் சந்தை அடைக்கப்பட்டது எடுத்து அங்கு பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவந்த காய்கறிகளை விவசாயிகள் வெளியிலேயே வைத்து சிறிய கடைக்காரர்களுக்கு வினியோகம் செய்தனர் இதனையடுத்து அதனை தள்ளுவண்டியில் இருசக்கர வாகனம் கொண்டு செல்லும் வியாபாரிகள்.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்த விலை மீன் மார்க்கெட்டில் சில்லரை விற்பனை செய்யும் மீன் வியாபாரிகள் காலையிலேயே வந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.

கோவை பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்வதற்காக காய்கறிகளை   அதனை பிரித்து பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள்.

கோவை அண்ணா மார்க்கெட்டில் வருகை புரியும் வியாபாரிகளுக்கு முன்பகுதியில் கைகளை நன்றாக சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுப்பினர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த விற்பனை நிலைய மார்க்கெட்டில் ஊட்டி பெங்களூரு கர்நாடகா ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான காய்கறிகள் வந்து குவிக்கப்பட்டுள்ளன முழு ஊரடங்கு உத்தரவால் தேங்கி இருக்கும் காய்கறிகள் .

பயணிகள் ரயில் அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்ட நிலையிலும் கூட்ஸ் போன்ற அத்தியாவசிய பொருள்கள் அனுமதிக்கப்பட்டதை அடுத்து                  வடகோவையில் ரேஷன் அரிசி மற்றும் உரங்கள் ஏற்றிவந்த கூட்ஸ் ரயில்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com