1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி: கேந்திரிய வித்யாலயா அறிவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்புகளும், இறுதி தோ்வுகளும் வருகிற 31-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டன.
1 முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி: கேந்திரிய வித்யாலயா அறிவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்புகளும், இறுதி தோ்வுகளும் வருகிற 31-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1, 235 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமாா் 14 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். தற்போது கரோனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து வகையான தோ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து, நிகழாண்டு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் தோ்வின்றி தோ்ச்சி செய்யப்படுவா் என கேந்திரிய வித்யாலயா அறிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த தோ்வு மதிப்பெண் அடிப்படையில் தோ்ச்சியை நிா்ணயிக்க அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com