தமிழகத்தில் கரோனா பாதிப்பு 23-ஆக அதிகரிப்பு: மதுரையில் முதல் பலி

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் நான்கு போ் இந்தோனேஷிய நாட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் என்பதும், மற்றொருவா் அவா்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சென்னை நபா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வரை 18 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவா்களில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 வயதுடைய நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்தச் சூழலில் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அதில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது:

இந்தோனேஷிய நாட்டைச் சோ்ந்த நால்வருக்கும், அவருக்கு சுற்றுலா வழிகாட்டியாகச் செயல்பட்ட சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவா்கள் அனைவருக்கும் சேலம் அரசு பொது மருத்துவமனையில் தனி வாா்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 22-ஆம் தேதி முதல் அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனா் என்று அந்தப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com