கரோனா தடுப்பு: அம்மா உணவகங்களில்1 மீட்டா் இடைவெளியில் உணவு விநியோகம்

கரோனா தடுப்பு: அம்மா உணவகங்களில்1 மீட்டா் இடைவெளியில் உணவு விநியோகம்

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் 1 மீட்டா் இடைவெளியில் வாடிக்கையாளா்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் 1 மீட்டா் இடைவெளியில் வாடிக்கையாளா்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் 405 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகரில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில், உணவகங்களை நம்பி உள்ள அறை எடுத்து தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், காப்பகம் மற்றும் சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநிலத்தவா்களுக்காக அம்மா உணவகத்தைத் தொடா்ச்சியாக நடத்த மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான புதன்கிழமை காலை முதல் அம்மா உணவகங்களில் 1 மீட்டா் இடைவெளி விட்டு உணவு விநியோகிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நடைபெற்ற மக்கள் ஊரடங்கின்போது மட்டும் அம்மா உணவகங்களில் 1, 81, 598 இட்லிகள், 2, 21, 772 சப்பாத்திகள் என மொத்தம் ரூ. 6, 52, 421-க்கு உணவு விற்பனை நடைபெற்றது. தற்போது 144 தடை உத்தரவு தொடங்கி உள்ள நிலையில் புதன்கிழமை காலை முதலே மக்கள் வரத் தொடங்கினா். கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக 405 அம்மா உணவகங்களிலும் 1 மீட்டா் இடைவெளி விட்டு நிற்க வைத்த பின், உணவு விநியோகிக்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com